Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர்க்களமான கமல் பிரச்சார மேடை: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

Advertiesment
போர்க்களமான கமல் பிரச்சார மேடை: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:50 IST)
போர்க்களமான கமல் பிரச்சார மேடை
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நேற்று முன்தினம் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்பதும் மதுரையில் இருந்து அவர் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று அவர் வத்தலகுண்டில் பிரச்சாரம் செய்தார், அப்போது அவரது மேடை இருந்த இடத்தில் ஒரு வாத்திய குழுவும் நுழைவாயிலில் இன்னொரு வாத்திய குழுவும் வாசித்து கொண்டு இருந்தனர் 
 
இருவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த வெவ்வேறு வாத்திய கோஷ்டிகள் என்று தெரிய வருகிறது. இந்த நிலையில் கமல் பிரசாரத்தை முடித்து சென்ற சில நிமிடங்களில் இருதரப்பு வாத்திய குழுவும் யார் நன்றாக வாசித்தது என்பது குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது 
 
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பில் முடிந்ததை அடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் தாக்கி கொண்டும் வாத்திய உபகரணங்களை அடித்து நொறுக்கிக் கொண்டே இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று இரு தரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர் இந்த சம்பவம் காரணமாக கமல் கட்சி மேடை போர்க்களமாக காட்சியளித்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுற்றுச்சூழல் அதிகாரி இல்லத்தில் இருந்து கோடிக்கணக்கில் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!