Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் அடுத்த அப்டேட்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் அடுத்த அப்டேட்
, புதன், 22 டிசம்பர் 2021 (22:12 IST)
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்தது என்பதும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கி மும்பை தாராவியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடக்க உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்னேசனல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கட ந்த ஆகஸ்ட் மாதம் முதல் நட ந்து வ ந்த படப்பிடிப்பு நடந்து வந்ததாகவும் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது போது அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இப்படப்பிடிப்பில், விஜய்சேதுபதி, பகத் பாசில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சம்ப ந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021-ல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விஜய் படம் !