செருப்பு போடுவதை கௌரவமாக நினைப்பதுபோல் மாஸ்க் போடுவதையும் கௌரவமாக நினைக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் செருப்பு போடுவதை கௌரவமாக நினைப்பதுபோல் மாஸ்க் போடுவதையும் கௌரவமாக நினைக்க வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கடைசியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா போய்விடும் என்பது நால்ல எண்ணமாக இருந்தாலும் அஜாக்கிரதையுடன் இருக்க கூடாது என சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பட ஆடியோ விழாவில் கமஹாசன் தெரிவித்துள்ளார்.