Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’வலிமை’’ படத்தின் அடுத்த பாடல்! யுவன் சூப்பட் அப்டேட் !

Advertiesment
’’வலிமை’’ படத்தின் அடுத்த பாடல்! யுவன் சூப்பட் அப்டேட் !
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (22:13 IST)
வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் புதிய சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது . இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்

யுவன் இசையில், விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடல்ஒரு சில மணி நேரத்தில் இந்த பாடலுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து. இதனை அடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டனர்.

திரையுலகில் அஜித் நடிக்க வந்து 30 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதே நாளில் இந்த பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இந்த பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், வலிமை பட த்தில் அஜித்தின் ஓபனிங் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் இதுவரை 10  மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் தற்போது டிரெண்டிங்கில் நம்பர் 1 எனவும், இப்பாடலை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இப்பாடலுக்கான டிரம்ஸ் வாசிப்பவர்கள் வடமாநிம் ஒரிசாலிருந்து வந்து வாசித்ததாக இசையமைப்பாளர் கூறியிருந்தார்.

அதேபோல், பிரபல தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள யுவன் சங்கர் ராஜா . நடிகர் அஜித்திற்கு எந்தப் பாடல் இயற்றினாலும் அது ஹிட்டாகும் எனவும், விரையில் வலிமை படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.  

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அடுத்த படத்தின் பாடலை மிகப்பெரிய சாதனைக்குரியதாக்க இப்போது யோசித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்!