Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்!

நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:11 IST)
நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்!
பிரபல தெலுங்கு நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ஆந்தாலஜி தெலுங்கு திரைப்படம் ஒன்று உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை நானி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நான் சகோதரி தீப்தி காந்தா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
ஐந்து கதைகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஆறு ஆண் கதாபாத்திரங்கள் மற்றும் ஏழு பெண் கதாபாத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். பல மொழிகளை சேர்ந்த கலைஞர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் ஒரு கதை எல்லாம் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவருடைய பகுதியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவரசா: கார்த்திக் நரேனின் ‘அக்னி’க்கு குவியும் வாழ்த்துக்கள்!