Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுக்கட்சி ஆரம்பிக்கும் பிக்பாஸ் ஜூலி; வைரலாகும் வீடியோ!

Advertiesment
புதுக்கட்சி ஆரம்பிக்கும் பிக்பாஸ் ஜூலி; வைரலாகும் வீடியோ!
, வெள்ளி, 11 மே 2018 (14:48 IST)
பிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் பிரபலமாகிவிட்டார்கள். நடிகை ஓவியா, ஜூலி, பிந்து, சுஜா, சினேகன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலருக்கும்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தாலும், வெகுவாக பிரபலமடைந்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற  பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது  ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
 
இந்த நிலையில் பிக்பாஸ் ஜூலியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் வீடியோவில் புதுக்கட்சி ஆரம்பிக்க போவதாக  ஒரு காணொளி பரவி வருகிறது. மேலும் அதில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?, கமல் ஆட்சியை பிடிப்பாரா? மாட்டாரா?, ஆர்.ஜே. பாலாஜி  அரசியலில் என்ன செய்ய போகிறார்கள்? அப்பா முடியலடா சாமி. அப்போ நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ண போகிறார்கள்? நாணும் துவங்க போகிறேன் ஒரு  கட்சி. விரைவில் அறிவிக்கப்பேகிறேன் காத்திருங்கள். ஒன்று சேர்ந்து வெல்வோம் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
webdunia
இது குறித்து நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் நல்லா வாயில வருது, போயிடு என்றும், மற்றொருவர் ஜூலிமா நீயாமா.... நீயாமா.... தமிழ்நாடு பாவம் மா... என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சலை அடுத்து இரும்புத்திரைக்கு பப்ளிசிட்டி செய்யும் பாஜகவினர்