Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலுவலகத்தின் கதவைப் பூட்டிக்கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்(வைரல் வீடியோ)

அலுவலகத்தின் கதவைப் பூட்டிக்கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்(வைரல் வீடியோ)
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (12:43 IST)
மத்திய பிரதேச்த்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கதவைப் பூட்டிவிட்டு நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களின் வேலைக்காக அலைக்கழிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் வேளையில் மத்திய பிரதேச அரசு அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற இடத்தில் குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் நபருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனைக் கொண்டாடுவதற்காக, ஊழியர்கள் பணிநேரத்தின் போது, அலுவலக கதவை பூட்டி விட்டு நடனமாடியுள்ளனர்.
webdunia

ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நடமாடும் வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய பிரதேச குழந்தைகள் நல உயர் அதிகாரி, பணி நேரத்தில் நடனமாடிய அனைத்து ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


நன்றி; RAJ NEWS Telugu

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமராஜ் பல்கலையில் நிர்மலாதேவிக்கு ஏ.சி அறையா? ராமதாஸ் திடுக்கிடும் தகவல்