Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி  நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

J.Durai

, திங்கள், 17 ஜூன் 2024 (17:47 IST)
கோவையில் வரும் ஆகஸ்ட் மாதம் 17"ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில்  இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கிங் ஆஃப் கிங்ஸ்  இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது..
 
இதில்,இதில் இசையமைப்பாளர்   கார்த்திக்ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். 
 
அப்போது பேசிய அவர், கோவையில் தம்முடைய கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்,
இந்நிகழ்ச்சியை முதலி்ல்  மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் கோவையில் இந்த நிகழ்ச்சியை இடம் மாற்றி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். 
 
கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி என  கூறிய அவர், இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும் எனவும் மூன்று முதல் நான்கு  மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர்,
மக்களைப் பார்த்து இலவசமாக பாட சொல்லினாலும் பாடுவேன் எனவும் 
பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறும் என தெரிவித்த அவர் உதாரணத்திற்கு நம்மூர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து பாடல்கள் பிடிக்கும் என்றால் வெளியூர்களில் வேறு விதமான பாடல்கள் பிடிக்கும் என கூறினார். 
அது மட்டுமின்றி தமிழ் சினிமா இசை என்றாலே அனைவரும் ஆர்வமாக இருப்பதாகவும் 
மேலும் காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதை மட்டுமே பாட உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளதாக தெரிவித்தார். 
முன்பெல்லாம் பாடல்கள் அதிக நேரம் இருந்த நிலையில் தற்போது பாடலின் நேரம் குறைந்து விட்டது குறித்தான கேள்விக்கு தற்பொழுது எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் போல் பாடல்கள் ஆகிவிட்டதாகவும் முன்பெல்லாம் இலையில் பலகாரங்கள் அனைத்தும் வைத்து இருப்போம் தற்பொழுது பர்கர் போல் மாறிவிட்டது என பதிலளித்தார்.
 
அடுத்த இரண்டு மாதங்களில் தனது இசையில் இரண்டு படங்கள் வெளியாவதாக தெரிவித்தார். 
 
இறுதியாக அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலை பாடினார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது,பி.கே.எண்டர்ட்டெயிண்ட்மென்ட் பாலசுப்ரமணியன், யெஸ் பாஸ் சிவகுமார்,விஜயன்,மார்க் ஒன் ஈவெண்ட்ஸ் சுதர்சன்,நிகழ்ச்சி இயக்குனர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!