இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியான பதான் படம் பாலிவுட் சினிமாவுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து, வசூலிலிலும் சாதனை படைத்தது.
இதையடுத்து, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜவான். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், ஷாருக்கான் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகர் எட் ஷூரன், ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடினார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எட் ஷூரன் இந்தியாவுக்கு வந்துள்ளர். மும்பையில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்ற அவர் மாணவர்களுடன் பாடல்களைபாடி மகிழ்ந்தார். நாளை மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் எட் ஷூரன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், எட்கர் ஷூரனை நேரில் சந்தித்தார். அப்போது, ஷாருக்கானின் சிக்னேச்சர் போசை செய்து, இருவரும் நடனம் ஆடினர். இதுகுறித்த வீடியோவை எட் ஷூரன் தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு எட் ஷூரன் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.