Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. பலர் காயம் என தகவல்..!

இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. பலர் காயம் என தகவல்..!

Mahendran

, சனி, 10 பிப்ரவரி 2024 (12:42 IST)
இலங்கையில் பாடகர் ஹரிஹரன் நிகழ்ச்சி நடந்த போது கூட்டம் நெரிசல் காரணமாக பலர் காயம் அடைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்ததால் குவிந்த கூட்டம் காரணமாக அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான் பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் நேற்று பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்பா, யோகி பாபு உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியானது

இதனைஅடுத்து கூட்டம் அதிக அளவில் கூடியது. இந்த நிலையில் சென்னையில் நடந்தது போலவே யாழ்ப்பாணத்திலும் அளவுக்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்பட்டிருந்ததை அடுத்து டிக்கெட்டுக்கான போதிய இடம் இல்லாததை அடுத்து பெரும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படத்தில் சீமான் கதாபாத்திரத்தில் நடந்த மாற்றம்!