Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமன்னன் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

Advertiesment
maamannan
, சனி, 1 ஜூலை 2023 (15:47 IST)
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகள் இருந்த நிலையில்,   நேற்று முன் தினம் ரிலீஸ்  ஆன மாமன்னன் படம்  நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், இரண்டாம் நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்ததாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், மாமன்னன் படத்தின் வெற்றியை  ஏ.ஆர்.ரஹ்மான், மாரி செல்வாராஜ், உதயநிதி,  கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட  படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணடித்து வைரல் ஆன பிரியா வாரியரின் லேட்டஸ்ட் போட்டோ!