தமிழ் சினிமாவில் பிரபல நடிகை நந்திதா தாஸின் தந்தை காலமானார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழ் சினிமாவில் இயக்குநர் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் மக்களிடம் கவனம் ஈர்த்தவர் நந்திதாதாஸ்.  இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஆவார். இப்படத்தையடுத்து,  இவர்  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , எதிர்நீச்சல்  உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 
									
										
			        							
								
																	சசிக்குமாருக்கு ஜோடியாக இவர் நடித்த எம்.ஜி.ஆர்.மகன் என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்நிலையில், நடிகை நந்திதா தாஸின் தந்தை சிவசாமி( 54) இன்று உயிரிழந்தார் என்பதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	நந்திதாஸின் தந்தை மரணத்திற்கு, சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.