Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரமாண்ட படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை

Advertiesment
பிரமாண்ட படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை
, சனி, 23 ஜனவரி 2021 (16:30 IST)
இந்திய சினிமாவில் முக்கியமான மற்றும் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி. இவர் இயக்கிவரும் டிரிப்பில் ஆர் படத்தின் ரகசிய செய்தியை பிரபல நடிகை ஒருவர் கசியவிட்டுள்ளதாக தெரிகிறது.

இவரது இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.

இதையடுத்து, ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்லதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இப்படம் இன்னொரு பக்கம் கொரொனா காலத்தில் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் சமீபத்தில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தொடங்கவுள்ளதாகவும் இதற்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் உற்சாகமுடன் படக்குழு கூறியுள்ளது.#RRRMovie #RRR

இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் முடிவடையும் வரைக்கும் வேறுஒரு படத்தில் தெலுங்கு சினிமா தல, தளபதிகளான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் கலந்துகொள்ளவில்லை என்பதால் இந்தக் கிளைமாக்ஸ் காட்சிகள் ,முடிந்தால் படத்தின் போஸ்ட் புரொடெக்சன், கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து சுமார் 70 % முடிந்துவிடும் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்  டிரிப்பில் ஆர் படத்தின் ரகசிய செய்தியை பிரபல நடிகை ஒருவர் கசியவிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் நடிக்கும் ஐரிஷ் நடிகை அலிசன் டூடி ஆர்.ஆர்.ஆர் படம் வரும் 2021ஆம் ஆண்டு அக்டோடர் மாதம் 8 ஆம் தேதி என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த படகுழுவினர் இதை நீக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் அவர் நீக்கினார். ஆனால் ரசிகர்கள் இதை ஸ்கிரீன் சாட் எடுத்து வைத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பாச்சி விஜய் தங்கச்சியின் அல்ட்ரா மாடர்ன் புகைப்படம்!