Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அவர்களை’ வைத்துக் கொண்டு நல்ல படம் எடுக்கவே முடியாது – ராஜமௌலி ஓபன் டாக்!

’அவர்களை’ வைத்துக் கொண்டு நல்ல படம் எடுக்கவே முடியாது – ராஜமௌலி ஓபன் டாக்!
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:10 IST)
கோபக்காரர்களை படப்பிடிப்பு தளத்தில் வைத்துக் கொண்டு நல்ல படங்களை எடுக்கவே முடியாது என இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் கமர்ஷியல் கிங்காக உலாவந்து கொண்டிருந்த ராஜமௌலியை நான் ஈ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. அதன் பின்னர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமாக்கின. இதையடுத்து அவர் இப்போது ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இந்தியாவே எதிர்பார்க்கும் திரைப்படமாக இப்போது உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் சமுத்திரக் கனி உள்ளிட்ட அனைத்து மொழிக் கலைஞர்களும் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ராஜமௌலி ‘கோபக்காரர்களை வைத்துக்கொண்டு நாம் நல்ல படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியான மற்றும் நட்புணர்வுடன் கூடிய ஒரு குழு இருப்பது மிக முக்கியம். அந்த மாதிரியான சூழலுக்காக நாம் சில விஷயங்களை இழந்துதான் ஆகவேண்டும். நம்மோடு தொடர்ந்து பணிபுரியும் சிலர் நமக்கு நண்பர்களாகி விடுவார்கள்.அதனால் நாம் கதை எழுதும் போதே அவர்கள் கதாபாத்திரங்களுக்குள் வந்துவிடுவார்கள்.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனிமி படத்தின் படப்பிடிப்பில் காயமான ஆர்யா! மருத்துவமனையில் அனுமதி!