Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த முக்கிய தகவல் !

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த முக்கிய தகவல் !
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:31 IST)
இந்திய சினிமாவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர் இப்படத்தைக் குறித்த முக்கிய தகவலை இன்று இப்படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய சினிமாவில் முக்கியமான மற்றும் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி.  இவரது இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண் அல்லூரி சீதராம ராஜூவாக நடித்துள்ள கதாப்பாத்திர ப்ரமோ வெளியானது.

இதையடுத்து, ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ள கதாபாத்திரப் ப்ரோமோ வெளியானது. இதில் ஜூனியர் என்.டி,.ஆர் , கொமரம் பீம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க முயற்சி செய்துள்லதாக ராஜமௌலி மீது விமர்சனம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே இதற்குக் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் இப்படம் இன்னொரு பக்கம் கொரொனா காலத்தில் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் இன்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், இன்றிலிருந்து ஆர்.ஆர்.ஆர் படத்தின்  கிளைமாக்ஸ் காட்சிகள் தொடங்கவுள்ளதாகவும்  இதற்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் உற்சாகமுடன் படக்குழு கூறியுள்ளது.
#RRRMovie #RRR

இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் முடிவடையும் வரைக்கும் வேறுஒரு படத்தில் தெலுங்கு சினிமா தல, தளபதிகளான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் கலந்துகொள்ளவில்லை என்பதால் இந்தக் கிளைமாக்ஸ் காட்சிகள் ,முடிந்தால் படத்தின் போஸ்ட் புரொடெக்சன், கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து சுமார் 70 %  முடிந்துவிடும் எனவும் தகவல் வெளியாகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி.... பிகினி உடையில் ஊஞ்சலாடும் ரைசா!