Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி இளையராஜாவை பத்தி பேசுனா அவ்வளவுதான்.! வைரமுத்துக்கு கங்கை அமரன் எச்சரிக்கை..!

Gangai Amaran

Senthil Velan

, செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (10:24 IST)
இளையராஜாவை பற்றி பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று  வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இசைஞானி இளையராஜா பாடலுக்கு முழு உரிமையும் இசையமைப்பாளருக்கு தான் என வழக்கு ஒன்றில் வாதிட்ட சம்பவம் சமீபத்தில் பேசு பொருள் ஆனது. இந்த விவகாரம் குறித்து படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, பாடலுக்கு இசை எவ்வளவு பெரியதோ வரிகளும் அவ்வளவு பெரியது இதை புரிந்தவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி என இளையராஜாவை மறைமுகமாக தாக்கி பேசினார்.
 
இந்த நிலையில், வைரமுத்துவின் பேச்சுக்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்
பதிலடி கொடுத்துள்ளார். வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால் அவர் நல்ல மனுஷன் கிடையாது என்றும் கங்கை அமரன் விமர்சித்தார். நல்ல புத்தியும் கிடையாது இன்று அவர் கூறினார்.
 
இளையராஜாவை குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே பேட்டிகளை கொடுப்பது சரியல்ல என்றும் அவரை அடக்கிவைக்க ஆள் இல்லாததால் துள்ளிக்கொண்டு இருக்கிறார் என்றும் கங்கை அமரன் தெரிவித்தார். தன்னைத் தானே புகழ்ந்து பேசக் கூடியவர் கவிஞர் வைரமுத்து என்றும் எந்தெந்த நேரத்துல எங்கெங்க போய் ஜால்ரா அடிக்கணுமோ, அங்கெல்லாம் அடித்து நல்ல வசதியாக இருக்கிறார் வைரமுத்து என்றும் அவர் விமர்சித்தார். 
 
இனிமேல் இளையராஜாவை பற்றி குற்றம் குறைகளை சொல்லிக்கொண்டு மரியாதை இல்லாம பேசினால் அதற்கான விளைவுகளை வேறமாரி சந்திக்க நேரிடும் என்று கங்கை அமரன் எச்சரித்துள்ளார். உங்கள் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் இளையராஜாவை பத்தி பேசாம வாயை பொத்திக்கிட்டு இருக்கனும் என கங்கை அமரன் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு நடிக்க இருந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன்...!