Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘தளபதி படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

thalapathi 66 wrap
, வியாழன், 26 மே 2022 (19:52 IST)
‘தளபதி படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
 
இந்த முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த செய்தி வெளியானது என்பதும் விஜய் சென்னை திரும்பி விட்டார் என்பதையும் பார்த்தோம். இருப்பினும் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தனது 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இரண்டாம் கட்டத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் மெஹ்ரினா பிரஸிதா உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்