Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைரலாகும் தல அஜித்தின் கெத்து வீடியோ..!

Advertiesment
வைரலாகும் தல அஜித்தின் கெத்து வீடியோ..!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (11:30 IST)
தல அஜித்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


 
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் தலையாய சிங்கமாக உயர்ந்து நிற்பவர் தல அஜித்.  தனது விடா முயற்சியால் சினிமாவில் பெரிய பின்பலம் ஏதுமின்றி தன் திறைமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். தான் ஒரு நடிகன் என்பதனையும் தாண்டி சமுதாயத்தில் நல்ல மனிதனாக திகழும் அவர் , பைக் ரேஸ், கார் ரேஸ் , விமான வடிவமைப்பு , போட்டோ கிராபர், என்று அத்தனை கலைகளிலும் சிறந்து விளங்குபவர். 
 
அஜித்தின் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அன்று முழுக்க திருவிழா தான், அந்த அளவிற்கு அவரின் படத்தை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். அவரை பற்றிய ஒரு சிறு விஷயம் என்றாலே தல ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகிவிடும், அப்படித்தான் தற்போது வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
 
அதாவது , விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். தற்போது அந்த படத்திற்காக  துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடக்கும் இடத்தில் அஜித் தென்படுகிறார். 

webdunia

 
தற்போது இந்த வீடியோ அஜித் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டுவருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'96' படக்குழுவினர்களுக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு