Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"தல" உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்ட டிடி..!

Advertiesment
, திங்கள், 21 ஜனவரி 2019 (18:50 IST)
அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதனை தவறவிட்டேன் - மனம் திறந்த டிடி 


 
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தல அஜித் ரசிகரக்ளின் முடிசூடா மன்னனாக திழந்து வருகிறார்.  அவரோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டதாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளி டிடி மனம் திறந்துள்ளார். 
 
கடந்த 20 ஆண்டுகாலமாக டிவி கிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்து வருபவர்  தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
 
சின்னத்திரை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வரும் முகம் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தனது சின்னத்திரை பயணத்தில் 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளார். 
 
இந்நிலையில் அண்மையில் டிடி அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாகவும், ஆனால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் மிகவும் வருந்தியதாகவும் டிடி மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தல ரசிகராக ’நடிக்கும் பிரபல நடிகர் ...படம் ஹிட்டு தான்...