சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பேமிலி சென்டிமெண்ட் காரணமாக ஒர்க்கவுட் ஆனதால் ஒரு வாரத்துக்கு மேலாக ஹவுஸ்புல் காட்சிகளாக பல திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது. போட்ட பணத்தை எடுத்த மகிழ்ச்சியில் விநியோகிஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் தல அஜித் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளார்கள். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட அஜித் ரசிகர்கள் அஜித்தின் விஸ்வாசம் போஸ்டரை ஒட்டி ராட்சத பலுனை பற்றகவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் எந்த சினிமா நடிகருக்கும் இப்படி எந்த ரசிகர்களும் செய்ததில்லை.