Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியில் பேச முடியாது: நிருபரிடம் வாக்குவாதம் செய்த பிரபல நடிகை!

Advertiesment
இந்தியில் பேச முடியாது: நிருபரிடம் வாக்குவாதம் செய்த பிரபல நடிகை!
, ஞாயிறு, 24 நவம்பர் 2019 (11:32 IST)
பிரபல நடிகையிடம் ஹிந்தியில் பேசுங்கள் என்று கூறிய நிருபரிடம், ‘ஹிந்தியில் பேச முடியாது, ஆங்கிலத்தில் தான் பேசுவேன் என அந்த நடிகை வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று பிரபல நடிகை டாப்ஸி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்த நிலையில், ஒரு நிருபர் குறிக்கிட்டு ’நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை எனவே நீங்கள் ஹிந்தியில் தான் பேச வேண்டும்’ என்று வலியுறுத்தினார் 
 
webdunia
ஆனால் அதற்கு டாப்சி, ‘நான் பாலிவுட் நடிகை மட்டுமல்ல, தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து உள்ளேன். எனவே நான் ஒரு இந்திய நடிகை. அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ என்று கூறியபடி ’இங்கு உள்ள எல்லோருக்கும் ஹிந்தி தெரியுமா’ என்று கேட்க பலர் ’தெரியாது’ என்று பதிலளித்தனர். இதனையடுத்து அந்த நிருபர் அமைதியானார் 
மேலும் பார்வையாளர்கள் ஒரு சிலர் கேட்ட கேள்வி குறித்து கருத்து தெரிவித்த டாப்சி இதுபோன்ர நிகழ்ச்சியில் இன்னும் சிறந்த கேள்வியை எதிர்பார்க்கின்றேன்’ என்று கூறியதும் பார்வையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது
 
மேலும் தான் ஒரு பாலிவுட் நடிகை என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் நான் தென்னிந்திய மொழிகளில் தான் நடிப்பு பழகினேன் என்றும், தென்னிந்திய மொழியை ஒருபோதும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும், தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நிறைய திரைப்படங்கள் நடிப்பேன் என்று கூறினார்
 
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் பாலிவுட் திரை உலகை போற்றாமல் தென்னிந்திய திரைப்படங்களை பெருமையாக கூறியது பாலிவுட் திரையுலகினர்களை அதிர வைத்துள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் கட்சிக்கு ஆதரவு: பிரபல நடிகை அறிவிப்பு