உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட நிலையில் இதுவரை திரையுலகிலிருந்து பெரிய நடிகர் நடிகைகள் யாரும் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்ரீப்ரியா, சினேகன் உள்பட ஒருசிலர் மட்டுமே கமல் கட்சியில் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்
கோவையில் தனியார் செல்போன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் அரசியல் இணைப்பு குறித்து கேள்விக்கு, ‘எனக்கு அது சம்பந்தமாக எந்த கருத்தும் தெரிவிக்க விருப்பமில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தந்தை கமல்ஹாசன் எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்றும் இருப்பினும் அவரது அரசியல் கட்சிக்கு ஆதரவு உண்டு என்றும் தெரிவித்தார்
முன்னதாக செல்போன் கடை திறப்பு விழாவின்போது ’இந்தியாவில் ஆல்பம் பாடல்களை எடுக்கவும் எதிர்காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியை அறிந்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கானோர் அந்த வணிக வளாகத்தில் கூடிய நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தி ஸ்ருதிஹாசனை பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்தனர்