சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தண்ணீர் பஞ்சம் வாட்டியெடுத்தது. ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டிய அளவுக்கு சென்னை ஏரிகள் வறண்டு போயின.
பிறகு மழை பெய்ய தொடங்கியதும் நிலைமை கொஞ்சம் சீராக தொடங்கியது. நிலத்தடி நீரை சேமிக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்து நீர் மட்டத்தை உயர்த்த அரசு முயற்சித்தது. அதன்படி சென்னை பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் முறையான மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் கடந்த ஜூலையில் 7 மீட்டருக்கும் கீழ் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 4 மீட்டர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.