Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 17 March 2025
webdunia

நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

Advertiesment
நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல்..!

Siva

, ஞாயிறு, 16 மார்ச் 2025 (17:15 IST)
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிந்துகோஷ் காலமானார். இதுகுறித்து செய்தி வெளியானதுடன், அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோரமா, கோவை சரளா போலவே, தமிழ் திரையுலகில் காமெடி நடிப்பில் கலக்கியவர் பிந்துகோஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர், சமீப காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

76 வயதான பிந்துகோஷ் உடலில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மருத்துவச் செலவு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதை அறிந்து, பல நடிகர், நடிகைகள் அவருக்கு நிதி உதவி செய்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்து உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிந்துகோஷ் மதியம் 2 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்த செய்தி அறிந்ததும், பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் மேட்ச் போல் பீச்சில் திரையிடப்பட்ட சிம்பு திரைப்படம்.. ரசிகர்கள் குஷி..!