முக்கிய கிரிக்கெட் போட்டிகளை பீச்சில் திரையிட்டு காண்பிப்பது போல், சிம்புவின் திரைப்படத்தை புதுச்சேரி பீச்சில் திரையிட்டு காண்பிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
சிம்பு-த்ரிஷா நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அந்த படம் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை, கார்த்திக்-ஜெஸ்ஸி கதாபாத்திரங்கள், கிளைமாக்ஸ் ஆகியவை இந்த படத்தின் முக்கிய ஹைலைட்ஸ் ஆகும்.
இந்த படம், மறு வெளியீட்டில் ஆயிரம் நாட்கள் திரையிடப்பட்டு சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் LED திரை மூலம் புதுச்சேரி கடற்கரையில் திரையிடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமர்ந்து கரகோஷத்துடன் கண்டுகளித்தனர்.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் சில திரைப்படங்களையும் இதே போல் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை மெரினாவிலும் இதே போன்று திரையிடலாமே என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.