Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

கழற்றிவிட்ட காதலன்: டைம் பார்த்து பழிதீர்த்த பிரபல நடிகை

Advertiesment
டாப்சி
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (12:08 IST)
தம்மை ஏமாற்றிய காதலனை நேரம் பார்த்து பழிதீர்த்ததாக நடிகை டாப்சி கூறியுள்ளார்.
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த டாப்சிக்கு தமிழில் ஆரம்பம், காஞ்சனா 2, வைராஜா வை போன்ற வெற்றி படங்களும், தெலுங்கு, இந்தி மார்க்கெட்டில் நல்ல இடமும் கிடைத்தது. பாலிவுட்டில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
webdunia
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னை காதலித்து ஏமாற்றிவவனை பழிதீர்த்தது பற்றி கூறியுள்ளார். 10 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒருவனை காதலித்தேன். அவனும் என்னை காதலித்தான். ஒரு கட்டத்தில் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.
 
ஆனால் கொஞ்ச காலம் கழித்து மீண்டும் என்னிடம் சமூகவலைதளத்தில் பேச முற்பட்டான். அவனை பழிதீர்க்க இதுவே நேரம் என முடிவு செய்தேன். என்னிடம் அவன் பேசிய உரையாடல்களை பதிவு செய்து அதனை அவனின் காதலிக்கு அனுப்பி வைத்து அவனை பழிதீர்த்தேன் என டாப்சி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை வைத்து இப்படி ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்ட மகேந்திரன்.! ஆனால் கடைசிவரை..!