Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தை வைத்து இப்படி ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்ட மகேந்திரன்.! ஆனால் கடைசிவரை..!

Advertiesment
அஜித்தை வைத்து இப்படி ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்ட மகேந்திரன்.! ஆனால் கடைசிவரை..!
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (11:24 IST)
பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் இன்று (ஏப்ரில் 2) காலமாகியுள்ள செய்தி திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
ஒவ்வொரு இயக்குனருக்கும் தன் வாழ்நாளில் இப்படி ஒரு படத்தை இயக்கவேண்டும் என்ற கனவு படம் ஒன்று இருக்கும். இயக்குனர் மகேந்திரனுக்கும் அது இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. 
 
தமிழ் சினிமாவின் வரலாற்றின் மிகச் சிறந்த இயக்குனராக கருதப்படும் மகேந்திரன்,  திரைக்கதை எழுத்தாளர், வசன கர்த்தா, நடிகர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். எம்.ஜி.ஆர். உதவியோடு தமிழ் திரை உலகில் நுழைந்த இவர்,  இயக்குனராக பல அற்புத படங்களை இயக்கி தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். 
 
கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் இன்று காலை காலமானார். மகேந்திரன் பல்வேறு நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், அஜித்தை வைத்தும் கூட ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்துள்ளார். 
 
நடிகர் அஜித்தை வைத்து ஒரு விளையாட்டு சம்மந்தபட்ட கதையை எடுக்க திட்டமியிருந்தாராம். அந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கூடைப்பந்து வீரராக நடிக்க இருந்தாராம். ஆனால், கடைசி வரை அந்த படம் கை கூடாமல் போய்விட்டது துரதிஷ்டமான ஒரு விஷயம் தான். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மார்வெல் அந்தெம் வெளியீடு !