Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவிற்கே இந்த நிலைமையா? அதிர்ந்துபோன பாலிவுட் நடிகை!!

Advertiesment
நயன்தாராவிற்கே இந்த நிலைமையா? அதிர்ந்துபோன பாலிவுட் நடிகை!!
, திங்கள், 25 மார்ச் 2019 (10:14 IST)
நயன்தாராவிற்கே இந்த நிலையா எனவும் அவரை விமர்சிப்பதற்கு ராதாரவி யார் எனவும் நடிகை டாப்சி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்து பேசியதற்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், சின்மயி உள்ளிட்ட பலர் பெண் என்றும் பாராமல் மிக மோசமான இந்த விமர்சனத்தை செய்த ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
webdunia

இதனால் திமுகவிலிருந்து ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
webdunia
 
இந்நிலையில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகை டாப்சி, டிவிட்டரில் இது அருவருக்கத்தக்க பேச்சு, ஒருவரின் கேரக்டர் பத்தி பேச ராதாரவி யார்? முன்னணி நடிகை நயன்தாராவையே இப்படி பேசுகிறார் என்றால் பற்றவர்களை இவர் எப்படி பேசிவார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதாவா எடுத்துட்டு `ரவி’ன்னு வச்சிக்கோங்க - ராதாரவிக்கு விஷால் கண்டனம்