Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காட்மேன் சீரியல் ஒளிபரப்பாகாது, ஒற்றுமையே உயர்வு: பிரபல நடிகர் டுவீட்

Advertiesment
காட்மேன் சீரியல் ஒளிபரப்பாகாது, ஒற்றுமையே உயர்வு: பிரபல நடிகர் டுவீட்
, செவ்வாய், 2 ஜூன் 2020 (07:51 IST)
காட்மேன் சீரியல் ஒளிபரப்பாகாது, ஒற்றுமையே உயர்வு:
சர்ச்சைக்குரிய காட்மேன் வெப்தொடர் இனி ஒளிபரப்பாகாது என்றும் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒற்றுமையே உயர்வு என்றும் பிரபல நடிகர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பலர் நடித்த காட்மேன் வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. இந்த டீசரில் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக குறிப்பிடும் வசனங்களும் காட்சிகளும் இருந்ததால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நடிகரும் பாஜக பிரபலமுமான எஸ்வி சேகர் அவர்கள் தனது தரப்பிலிருந்து ஒரு புகாரை அளித்தார். இந்த புகார்களின் அடிப்படையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறை இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்தத் தொடரில் பணிபுரிந்த அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது
 
இந்த நிலையில் காட்மேன் தொடர் வரும் 12ம் தேதி வெளியாகும் என ஜீ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தொடர் ஜூன் 12ல் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ் வி சேகர் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட காட்மேன் இனி ஒளிபரப்பாகாது. சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதியப்பட்டுவிட்டது.  சரியான முறையில் கம்ப்ளைண்ட் டிராப்ட் செய்து கொடுத்த சீனியர் வழக்கறிஞர் குமரகுரு அவர்களுக்கும் ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையுடன் பயணித்த, ஜாதி வேறுபாடின்றி ஆதரித்த அனைத்து இந்து சகோதரர்களுக்கும், மாற்று மத சகோதரர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும். இதன் நீதி தனிமரம் தோப்பாகாது. ஒற்றுமையே உயர்வு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரியலில் வருவது போல் சிம்பிளான புடவையில் சுண்டி இழுக்கும் சித்ரா...!