Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வி அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி ரஜினியை முன்னிறுத்திய மத்திய அமைச்சர்

கல்வி அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி ரஜினியை முன்னிறுத்திய மத்திய அமைச்சர்
, செவ்வாய், 2 ஜூன் 2020 (07:37 IST)
மத்திய மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்து அதில் தமிழக முதல்வருக்கு அடுத்ததாக ரஜினியின் ட்விட்டர் ஐடியை டேக் செய்துள்ளார். ரஜினிக்கு பின்னரே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர்களுக்கு டேக் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மனித மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் நேற்று தனது டுவிட்டரில் செம்மொழி தமிழாய்வு தமிழ் நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இன்னொரு டுவிட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.  இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த டுவீட்டை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களுக்கு டேக் செய்த மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், அதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் டேக் செய்துள்ளார் 
 
முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்துவிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை அவர் பின்னுக்கு தள்ளியது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று ஒரு சில தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: பிரதமர் இரங்கல்