நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகை சோம்யா சேத் தனக்கும் அதுபோல தற்கொலை எண்ணம் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மதியம் மர்மமான முறையில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுஷாந்த் மறைவு குறித்து பேசியுள்ள சோம்யா சேத் ‘எனக்கும் இதுபோல தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது. ஆனால் அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால் தற்கொலை செய்துகொள்ளவில்லை. உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால், உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். அப்படி முடியவில்லை என்றால் உங்கள் கண்ணாடி முன்னாள் நின்று அதில் தெரியும் மனிதரிடம் பேசுங்கள். எல்லா பிரச்சனைகளும் ஒரு நாள் சரியாகிவிடும் என சொல்லுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.