லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தெலுங்கு படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய மூன்று படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து அவர் இயக்கத்தில் ரஜினியே ஆர்வமாக கதைக் கேட்டுள்ளார் என்றால் அவரின் வளர்ச்சியைப் பற்றி சொல்லவேண்டுமா.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு மிகப்பெரிய தொகை கொடுத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நடிப்பார்கள் எனப் பேசப்பட்டது. ஏனென்றால் அந்த படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் சூர்யா மற்றும் கார்த்தியின் சகோதரரான எஸ் ஆர் பிரபு.
ஆனால் இப்போது அந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப்படம் ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.