Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்கொலை தீர்வாகுமா..? ரசிகரின் அக்காவுக்கு ஆறுதல் சொன்ன விஜய்!

Advertiesment
தற்கொலை தீர்வாகுமா..? ரசிகரின் அக்காவுக்கு ஆறுதல் சொன்ன விஜய்!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:55 IST)
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் விஜய்யின் ரசிகர் பாலாவின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலமாக அறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

சில நாட்களுக்கு முன்னர் பாலா(21) என்ற விஜய்யின் ரசிகர் ஒருவர் விஜய்க்கு ட்விட் செய்துவிட்டு மன அழுத்தத்தால் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்த பதிவில், “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா” என்று பதிவிட்டு விஜய்க்கு டேக் செய்துள்ளார். இந்த விஷத்தை அறிந்த மற்ற விஜய் ரசிகர்கள் பெருந்துயரத்தில் அவருக்கு அஞ்சலி கூறி வருகின்றனர். அத்துடன் திரைப்பிரபலங்களான நடிகர் சஞ்சீவ்,  ஷாந்தனு, நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர் #RIPBala என்ற ஹேஷ் டேக்கில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தனது கல்வி சான்றிதழ்கள் எரிந்து போனதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விஷயம் சம்மந்தமாக பாலாவின் அக்காவுக்கு தொலைபேசி மூலமாக ஆறுதல் சொல்லியுள்ளாராம் விஜய். அப்போது ‘இப்படி செய்யலாமா? எந்தவொரு விஷயத்துக்கும் தற்கொலை தீர்வாகுமா? எனக் கேட்டுள்ளார். மேலும் அவர் அக்கா கணவரிடம் ‘நீங்கள் அவனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை’ என தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய உதவி செய்த நடிகர் – அஜித் ஸ்டைலை பாலோ செய்யும் பவர்ஸ்டார்!