Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பாதித்த எஸ் பி பிக்கு எக்மோ சிகிச்சை!

Advertiesment
கொரோனா பாதித்த எஸ் பி பிக்கு எக்மோ சிகிச்சை!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (15:24 IST)
கொரோனா வைராஸ் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எஸ் பி பிக்கு எக்மோ எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுகுறித்து அவரது மகன் விளக்கமளித்தார். மேலும் அவரது புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் அவருக்கு எக்மோ எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் கருவி மூலமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கருவி இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை உறுதிப்படுத்துகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த முடியுமா? சோனு சூட் அளித்த பதில்!