பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

Mahendran
வெள்ளி, 6 ஜூன் 2025 (16:44 IST)
சூர்யாவின் மகள் தியா மற்றும் தனுஷின் மகன் லிங்கா ஆகியோர் சமீபத்தில் கல்வியை முடித்து பட்டம் பெற்ற நிலையில், சிம்ரனின் மகனும் பட்டம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நடிகை சிம்ரன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், தனது மகன் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
 
"சில வருடங்களுக்கு முன் என் கை குழந்தையாக இருந்த எங்கள் மகன், இன்று தனது கையால் பட்டத்தை வாங்கியதை பார்க்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. எங்களுக்கு மேல் வளர்ந்துள்ள எங்கள் மகன் இன்னும் வளர்ச்சி அடைவான். நீ எங்களை பெருமைப்படுத்தி விட்டாய்" என்று சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
இதனை அடுத்து, சிம்ரன் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் சூர்யாவின் மகள் தியா பட்டம் பெற்ற நிலையில், சென்னையில் உள்ள பள்ளியில் தனுஷின் மகன் பட்டம் பெற்றார். இப்போது சிம்ரனின் மகனும் பட்டம் பெற்றுள்ளார். இதையடுத்து  திரையுலக நட்சத்திரங்களின் வாரிசுகள் வரிசையாக பட்டங்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments