கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (14:35 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸான வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து சூர்யா- வெங்கட் அட்லூரி கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் நடந்தது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்குகிறார். இவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதை பிரதியைப் பழனி முருகன் கோவிலில் வைத்து ஆசி பெற்றுள்ளனர் சூர்யாவும் வெங்கட் அட்லூரியும். சமீபகாலமாக சூர்யா ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் காரணமாக அவர் சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அதையொட்டிதான் தற்போது அவர் தன் படத்தின் திரைக்கதைப் பிரதியை கோயிலில் வைத்து ஆசி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments