கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸான வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து சூர்யாவின் அடுத்த படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடந்துள்ளது. குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்குகிறார். இவர் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தைக் குறுகிய காலத்துக்குள் முடித்து அடுத்த ஆண்டு மே 1 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் ரெட்ரொ திரைப்படம் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.