ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட அணியில், IPL 2025 தொடரில் துரிதமான ஆட்டத்தால் கவனம் ஈர்த்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி மற்றும் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அபிக்யான் குண்டு துணை கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ், 7 போட்டிகளில் 252 ரன்கள் எடுத்ததோடு, வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான சதம் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதே நேரத்தில், காயம் அடைந்த ருதுராஜ் கெய்க்வாடுக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் வந்த ஆயுஷ், 6 ஆட்டங்களில் 206 ரன்கள் எடுத்து, அணியில் மூன்றாவது உயர்ந்த ஸ்கோரராக திகழ்கிறார். பெங்களூருவுக்கு எதிராக அவர் விளாசிய 48 பந்தில் 94 ரன்கள் குறிப்பிடத்தக்கது.
அணி விவரம்:
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), அபிக்யான் குண்டு (துணை கேப்டன், WK), ஹர்வன்ஷ் சிங் (WK), வைபவ் சூரியவன்ஷி, விகான் மல்ஹோத்திரா, மௌல்யராஜ்சிங் சாவடா, ராகுல் குமார், ஹெனில் பட்டேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, ஆர்.எஸ்.அம்பிரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் பட்டேல், முகம்மது இனான், அதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்.
ஸ்டாண்ட்பை: நமன் புஷ்பக், விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (WK), டி. தீபேஷ், வேதாந்த் திரிவேதி.