Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரைக்குடிக்கு கிளம்பிய சூர்யா படக்குழு!

காரைக்குடிக்கு கிளம்பிய சூர்யா படக்குழு!
, புதன், 14 ஜூலை 2021 (16:25 IST)
சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அரசு கட்டுபாடுகளோடு திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு  ஜூலை 2 ஆம் வாரம் முதல் புதுக்கோட்டையில் தொடங்க உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஒரே கட்டமாக மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ஏற்கனவே எடுத்த காட்சிகளுக்கு அது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இப்போது காரைக்குடிக்கு படக்குழு படப்பிடிப்புக்கு சென்று நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு கதை எழுதியுள்ள இயக்குனர்! இதுதான் காரணமாம்!