நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவல் படக்குழுவால் உறுதிப் படுத்தப்படவில்லை.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  Phoneix (வீழான்) என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் ஹீரோவாக அறிமுகம் ஆவது குறித்து பேசியுள்ள சூர்யா “நான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்று அப்பாவிடம் சொன்னபோது அவர் சரி என்றார். ஆனால் அப்போது நான் 120 கிலோ எடை இருந்தேன். என் முகம் அழகாக இல்லை என்று தாழ்வு மனப்பாண்மையோடு இருந்தேன். ஆனால் என் அப்பாதான் “பண்றா பாத்துக்கலாம்” என உத்வேகம் கொடுத்தார்” எனப் பேசியுள்ளார்.