Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘ஃபீனிக்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (10:40 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார். இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.  அதையடுத்து ஆறு மாதங்களாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் படத்தில் இருந்து ‘இந்தா வாங்கிக்கோ’ என்ற பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டா மேல் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments