Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

சூர்யாவின் பிறந்தநாளுக்கு ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

vinoth

, வியாழன், 18 ஜூலை 2024 (10:09 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் வாலி  ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இவற்றில் உச்சமாக விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான வேல் படம் ஜூலை 19 ஆம் தேதில் சில திரைகளில் ரிலீஸாகவுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளை செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்தியின் மெய்யழகன் படக்குழு!