Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் கட்டண உயர்வு பற்றி விஜய் ஏன் பேசவில்லை? நெட்டிசன்கள் கேள்வி..!

Advertiesment
Vijay Speech

Mahendran

, புதன், 17 ஜூலை 2024 (15:56 IST)
மின் கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் பேசி உள்ள நிலையில் விஜய் மௌனமாக இருப்பது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தன. 
 
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் மின்கட்டண உயர்வு பற்றி பேசாமல் மௌனமாகவே இருப்பது அவர் திமுக ஆதரவாளரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். 
 
ஆரம்பத்தில் திமுக எதிர்ப்பாளர் போல் காட்டிக்கொண்ட விஜய் அதன் பிறகு நீட் தேர்வு விசயத்தில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார் என்பதும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசுக்கு எதிரானவர் என்றும் காட்டிக் கொண்டார். 
 
இந்த நிலையில் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை பார்த்தால் அவரும் கமல்ஹாசன் போல் திமுகவின் ஆதரவாளரா என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி கடனை திரும்ப செலுத்தாத முடியாத நிலை.. கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த ஆடிட்டர்..