Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணா படம் எப்போது தொடங்கும்?... முதல் முறையாக இந்தி படம் குறித்துப் பேசிய சூர்யா!

vinoth
வியாழன், 14 நவம்பர் 2024 (09:18 IST)
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது. இதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படமும் முடிந்துள்ளது. அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படி நீண்ட வரிசையை அவர் கொண்டிருக்கும் நிலையில் பாலிவுட்  இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே தகவல் வெளியாகி வருகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் கர்ணா என்ற இந்த படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது  மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் எனவும் பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்த படம் குறித்து சூர்யா பேசியுள்ளார். அதில் “நானும் ராகேஷும் சந்தித்துப் பேசியது உண்மைதான். அந்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதற்கு இன்னும் நேரம் தேவை. விரைவில் ஷூட்டிங் செல்வோம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments