‘கங்குவா’ படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு அரசு கூறிய பதில் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும், இந்த படத்தின் தொடக்க வசூல் மற்றும் ஒட்டுமொத்த வசூல் இந்திய திரையுலகில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் தமிழக அரசிடம் அதிகாலை 5 மணி காட்சிக்கு அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அரசு அளித்த பதிலில் காலை 9 மணி காட்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முதல் காட்சி ஒன்பது மணிக்கு திரையிடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுவையில் அதிகாலை காட்சி திரையிடப்படுவதை அடுத்து, தமிழகத்தில் முதல் காட்சி தொடங்கும் முன்பே இந்த படத்தின் ரிசல்ட் என்ன என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.