Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது!? சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி!

கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது!? சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி!

Prasanth Karthick

, செவ்வாய், 12 நவம்பர் 2024 (13:13 IST)

சூர்யா நடித்து வெளியாக உள்ள கங்குவா திரைப்படம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள உத்தரவு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முதலில் அக்டோபர் 10ம் தேதியில் வெளியாக இருந்த கங்குவா, வேட்டையன் ரிலீஸால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது நாளை மறுநாள் நவம்பர் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.

 

இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் கடந்த சில வாரங்களாகவே படக்குழுவினர் கொச்சி, ஹைதராபாத், மும்பை என சுற்றி வந்தாலும், படத்தின் வெளிநாட்டு முன்பதிவுகளில் சுணக்கம் காணப்பட்டு வருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பட ரிலீஸின்போது பெருமழை பெய்தால் பார்வையாளர்கள் வருகை குறையும் என்ற பதட்டமும் உள்ளது.

 

இந்நிலையில் கங்குவா படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் Fuel Technologies என்ற நிறுவனம், பட நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய ரூ.1.60 கோடியை தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 1.60 கோடி ரூபாயை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் படத்தை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் கங்குவா ரிலீஸில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாம் க்ரூஸின் மரணம்தான் Mission Impossibleன் முடிவா? - MI: The Final Reckoning ட்ரெய்லர்!