Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆச்சர்யப்பட வைக்கும் சூர்யாவின் கங்குவா பட ஓடிடி உரிமை! கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ஆச்சர்யப்பட வைக்கும் சூர்யாவின் கங்குவா பட ஓடிடி உரிமை! கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

vinoth

, வெள்ளி, 22 மார்ச் 2024 (12:38 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்தார் சூர்யா. இதையடுத்து வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமை அமேசான் ப்ரைம் வீடியோ தளம் வாங்கியுள்ளது. தென்னிந்திய உரிமை மட்டும் சுமார் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை சூர்யா படத்துக்கு இல்லாத ஒரு தொகையாக இந்த வியாபாரம் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு எத்தனை கெட்டப்?