Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு எத்தனை கெட்டப்?

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு எத்தனை கெட்டப்?

vinoth

, வெள்ளி, 22 மார்ச் 2024 (12:33 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரால் தொடர்ச்சியாக இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியாததால் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் நானிஅல்லது சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மூன்று வெவ்வேறு விதமான கெட்டப்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மூன்று வெவ்வேறு வயதான கெட்டப்களில் அவர் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய அப்டேட்டை வெளியிடும் சண்முக பாண்டியனின் படை தலைவன் படக்குழு!