Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவின் கங்குவா பட டீசர் ரிலீஸ் தேதி இதுதானா? லேட்டஸ்ட் தகவல்!

சூர்யாவின் கங்குவா பட டீசர் ரிலீஸ் தேதி இதுதானா? லேட்டஸ்ட் தகவல்!

vinoth

, திங்கள், 18 மார்ச் 2024 (07:14 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்தார் சூர்யா. இதையடுத்து வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்றது. அதையடுத்து படத்தின் டீசர் ஏப்ரல் 14 ஆம் தேதி பண்டிகை நாளன்று வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் டீசரோடு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்போது அழைத்தாலும் ஷூட்டிங் செல்ல தயார்… விடாமுயற்சி அப்டேட் கொடுத்த அஜித் தரப்பு!