காயம் ஏற்பட்டது உண்மை தான்... நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் - சூர்யா விளக்கம்!

சனி, 30 மே 2020 (08:38 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரையும் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்து வந்தனர்.

இதற்கிடையில் பொன்மகள் வந்தால் படத்தின் புரொமோஷனுக்காக லைவ் சாட்டில் பதிலளித்த சூர்யாவிடம் ரசிகர்கள் காயம் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த சூர்யா, ஆம், நான் வீட்டில் ஒர்கவுட் செய்து கொண்டிருந்த போது அதிக எடை கொண்ட டம்பெல்ஸ் எடுத்து கீழே வைத்தேன் அது எதிர்பாராத விதமாக கை  விரலில் விழுந்துவிட்டது. சிறிய காயம் தான் இருந்தும் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இன்னும்  15 அல்லது 20 நாளில் அது சரியாகிவிடும் என கூறினார்.

மேலும் அவர் செய்த தவறை மற்றவர்கள் செய்யக்கூடாது என ஒரு டிப் கொடுத்தார். அதாவது, ஒர்கவுட் செய்யும் போது டம்பெல்களை எடுத்து கீழே வைத்துக்கொள்ள கூடாது. ஒன்றினை எடுத்து உடற்பயிற்சி செய்து முடித்தபிறகு அதை rackல் வைத்துவிட்டு பின்னர் மற்றொன்றை எடுத்து பயன்படுத்துங்கள் என அறிவுரை கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சமந்தாவின் கீழ்த்தரமான செயலால் பூஜா ஹெக்டேவிற்கு குவியும் ஆதரவு!